search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் பலி"

    • பள்ளிகொண்டாவை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 38). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராஜகுரு வேலூரில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தினமும் அவர் பைக்கில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அன்பூண்டி வங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது பைக் சாலை தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுருவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து மனைவி குழந்தைகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    ராஜகுருவிற்கு பின் புறம் தலையில் மட்டும் அடிபட்டுள்ளது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழக்காமல் தப்பித்து இருக்கலாம்.

    அவர் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதினாரா அல்லது வேறு ஏதாவது வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்டர்ஜோஸ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • தக்கலை அருகே பட்டாணிகுளம் வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது, கார் ஓட்டி வந்த விக்டர் ஜோஸ் சம்பவ இடத்திலே பலியானார்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஜோஸ் (வயது 36 ). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் தற்போது புலியூர்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு விக்டர் ஜோஸ் தனது நண்பர் சோபனுடன் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தக்கலை அருகே பட்டாணிகுளம் வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது, கார் ஓட்டி வந்த விக்டர் ஜோஸ் சம்பவ இடத்திலே பலியானார். பின் இருக்கையில் அமர்ந்து இருந்த சோபன் லேசான காயத்துடன் தப்பினார். இது சம்பந்தமாக பஸ் டிரைவர் ரவீந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்த சந்திரகாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசு (வயது60). இவர் நேற்று மாலை 5 மணியளவில் பரவலூர் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விருத்தாசலம் நோக்கி வந்த கார் சந்திரகாசு மீது மோதியது . இதில் பலத்த காயமடைந்த சந்திரகாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  விபத்தை நேரில் பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    பின்னர் விருத்தாசலம் வேப்பூர் சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் விருத்தாசலம் சேலம் சாலை மார்க்கத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வரட்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்தார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

    காவேரிப்பட்டணம்

    காவேரிப்பட்டணத்தில் வசித்து வந்தவர் மாதேஷ் (வயது 41). இவர் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர். இவரும் இவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பினர்.

    வரட்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு பின்னர் அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாதேஷ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • கணவன்-மனைவி2 பேரும் மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.
    • அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையம் பகுதியை சேர்ந்த வர் சங்கரன். (வயது 72). விவசாயி. இவரது மனைவி ருக்மணி (65).

    இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் காமராஜ் நகர் பிரிவு அருகே வந்தனர்.

    அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது. இதில் கணவன்- மனைவி இரு வரும் தூக்கி வீசப்பட்டு படு காயம் அடைந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருக்மணி பரிதாபமாக இறந்தார்.

    சங்கரன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அத்தாணி பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாஞ்சாலை யின் மாமியார் இறந்து இறந்துவிட்டதாக வேல்முரு கனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சொர்க்க ரதம் வாகனம் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் வந்து அயோத்தி என்பவர் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    விருத்தாசலம் மாவட்டம் சின்ன பரூர் தாலுக்கா புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அயோத்தி (வயது 67). இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகனும் பாஞ்சாலை என்ற மகளும் உள்ளனர் பாஞ்சாலையை மேலூர் கிராமத்தில் சேர்ந்தவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் பாஞ்சாலை யின் மாமியார் இறந்து இறந்துவிட்டதாக வேல்முரு கனுக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. பாஞ்சாலை யின் இறுதி சடங்கில் பங்கேற்ப தற்காக மேலூர் வந்துள்ளார். பிறகு பாஞ்சாலையின் இறுதி சடங்கு முடித்துவிட்டு மேலூரில் இருந்து இந்திலி செல்லும் சாலையில் முருகா பாலிடெக்னிக் அருகே இடது ஓரமாக நடந்து சென்றுள்ளார்.

    அதே திசையில் வந்த சொர்க்க ரதம் வாகனம் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் வந்து அயோத்தி என்பவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்டு அதிக அளவில் காயம் ஏற்பட்டது இதனால் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசினர் பொது மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 11ஆம் தேதி அன்று பரிதாபமாக இறந்தார். வேல்முருகன் கொடுத்த புகாரில் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது.
    • சம்பவ இடத்திலேயே கந்தன் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி அருகேயுள்ள ராஜாபேட்டைபகுதியை சேர்ந்தவர் கந்தன்(56). சத்துணவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இவர் தனது குடும்பத்துடன் பழனிக்கு சென்றுள்ளார். இரவு ஊருக்கு வந்தவர் வீட்டின் சாவியை வாங்கிவர மதிகோன் பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த வேன் மோதியதில் சமத்துவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • சேத்தியாத்தோப்பு அருகே மகள் வீட்டுக்கு வந்த தந்தை விபத்தில் பலியானார்.
    • சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது

    கடலூர்:

    நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துலிங்கம். விவசாயி.இவரது மகள் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் உள்ளார். இவரது வீட்டுக்கு முத்துலிங்கம் வந்தார். அப்போது சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலிங்கம் இறந்தார். இது பற்றி சேத்தியாத்ேதாப்பு போலீசார் விசாரிக்கிறார்கள். 

    • லாரி டயரில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்.
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    ஜமுனாமரத்தூர் தாலுகா மேல்அத்திப்பட்டு கிராமம் வெங்கடேசன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 21). இவர் நேற்று காலை பைக்கில் அவரது நண்பர் நெல்லிமரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (21) என்பவருடன் அத்திப்பட்டு கிராமத்தில் இருந்து ஜமுனாமரத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி அருகில் செல்லும் போது எதிரில் சென்று கொண்டிருந்த லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்க டயரில் பைக் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் மற்றும் ஏழுமலை ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    சக்திவேல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஏழுமலை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவலறிந்த ஜமுனாமரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    மேலும் காயம் அடைந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திட்டுவிளை-துவரங்காடு பகுதியில் நடந்த சாலை விபத்தில் அண்ணன்- தங்கை இருவரும் பலியானார்கள்.
    • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூர் பணிக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26), ஐ.டி.ஐ. படித்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள மிட்டாய் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.


    அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (22). இவர் நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ராஜேஸ்வரியும், மணிகண்டனும் அண்ணன் தங்கை உறவு முறை ஆகும். இதனால் தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக வேலைக்கு வருவது வழக்கம்.

    நேற்று காலையில் வழக்கம் போல் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து கொண்டிருந்தனர். திட்டுவிளை-துவரங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று மோதி மணிகண்டன் ராஜேஸ்வரி இருவரும் பலியானார்கள்.

    பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மணிகண்டன், ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த கார் டிரைவர் முத்துக்குமார் (25) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


    விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மணிகண்டன், ராஜேஸ்வரி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த வேன் அதிவேகமாக வந்த இவர்கள் மீது மோதி உள்ளது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இவர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாகி இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ×